Home உலகம் சோலார் பேனல் மூலம் கீரை வளர்க்கும் – சவுதி விஞ்ஞானிகள்

சோலார் பேனல் மூலம் கீரை வளர்க்கும் – சவுதி விஞ்ஞானிகள்

by Jey

சோலார் பேனல் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இயற்கை வகை மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு, நிறுவன கட்டடங்கள், கால்வாய், ஆறு, ஏரி என பல இடங்களில் சூரிய ஒளி பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் சோலார் பேனல்கள் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பாலைவனத்திலும் தாவரங்களை வளர்க்க முடியும். மேலும் குறைந்த செலவில் எதிர்காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை பாதிப்பை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின்படி வழக்கமான சோலார் பேனல்களுக்கு பதிலாக ‘ைஹட்ரோஜெல்’ பூசப்பட்ட சோலார்பேனல்கள் ஒரு பெரிய உலோக பெட்டியின் மேல் பொருத்தப்படுகின்றன. ைஹட்ரோஜெல் என்பது ஒரு பாலிமர் வேதிப்பொருள். இது இயற்கையாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றி சிறிது சிறிதாக வெளியிடுகிறது.

இதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தாவரம் வளர்க்கும் பிளாஸ்டிக் பெட்டியில் விதை விதைத்து ‘கீரை’ செடி வளர்க்கப்பட்டுள்ளது.

இதற்கான பரிசோதனையாக கோடைகாலமான கடந்த ஜூன் 16ல் 60 கீரை விதை இடப்பட்டது. ஜூலை 1ல் இதில் 60க்கு 57 விதைகள் நன்றாக முளைத்து 18 செ.மீ., உயரம் வரை வளர்ந்தது. பரிசோதனையில் 1519 வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டு வாரத்தில் ைஹட்ரோ ஜெல்லில் இருந்து மொத்தம் 2 லிட்டர் தண்ணீர் கிடைத்தது.

related posts