Home விளையாட்டு 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி

by Jey

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அப்படியே இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேஸ்லேவுட் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 58 ரன்களும், மேத்யூ வேட் 39 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷெல்டன் காட்டெரல் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

related posts