Home கனடா கனேடிய பாடசாலை ஒன்றில் குண்டு பீதி

கனேடிய பாடசாலை ஒன்றில் குண்டு பீதி

by Jey

கனடாவின் கெலிடொன் பகுதியில் காணப்படும் இரண்டாம் நிலைப் பள்ளி மற்றும் அருகாமையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி என்பனவற்றுக்கு இந்த குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

மேபீல்ட் இரண்டாம் நிலைப் பள்ளியில் குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக போலீசார் அறிவித்திருந்தனர்.

குண்டு பீதி காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இரண்டு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடிகளைக் கொண்ட பாடசாலை கட்டிடத்தில் 1900 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ஓர் கட்டிடத்தில் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி குண்டை தேடுவது மிகவும் சவால் மிக்க ஒரு காரியம் என போலீசார் தெரிவித்தனர்.

அருகாமையில் இருந்த வீதிகள் மூடப்பட்டு மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

குண்டு வீதி குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

related posts