Home கனடா கனடாவில் உயரும் வட்டி வீதங்கள்…

கனடாவில் உயரும் வட்டி வீதங்கள்…

by Jey

கனாடாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மத்திய வங்கி ஆளுநர் கிப்ட் மெக்கலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வட்டி வீத உயர்த்துகைகள் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணவீக்க அதிகரிப்பானது உள்நாட்டு பொருட்களின் விலைகளில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்ய போர், கோவிட் பெருந்தொற்று, விநியோக சங்கிலி பிரச்சனை போன்ற ஏதுக்களினால் உலக அளவில் பொருளாதாரங்கள் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஆண்டு பணவீக்க வீதம் எட்டு தசம் ஒரு வீதமாக வரலாறு காணாத அளவிற்கு உயர்வடைந்திருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்த பணவீக்கவீதமானது ஏழு விதமாக குறைவடைந்திருந்தது.

புள்ளி விபர அடிப்படையில் பண வீக்கம் சற்றே குறைவடைந்து இருந்தாலும் பொருட்களின் விலை ஏற்றமானது தொடர்ச்சியாக அதிகரித்த போக்கினை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி வீதங்கள் உயர்த்தப்பட வேண்டி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எவ்வாறெனினும் வட்டி வீத அதிகரிப்பானது பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் எனவும் நாடு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts