தங்கள் குடும்ப வர்த்தக விவகாரங்களை நிர்வகிப்பதற்கான குடும்ப அலுவலகங்களை பல கோடீஸ்வரர்கள் அண்மைய காலங்களில் சிங்கப்பூரில் அமைத்து வருகின்றனர்.
ஏற்கனவே சிங்கப்பூரில் ஹெட்ஜ் பண்ட்-யின் ரே டாலியோ, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் போன்றோர் குடும்ப அலுவலகங்களை நிர்வகித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி சிங்கப்பூரில் தனது குடும்பத்துக்கு ஒரு அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் குடும்ப அலுவலகத்தை நிர்வாகம் செய்யவும் நடத்தவும் முகேஷ் அம்பானி சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்துள்ளதாகவும், அவர்கள் யார் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பல குடும்ப அலுவலகங்கள் இங்கு அமைவதற்கு சிங்கப்பூரின் குறைந்த வரிகளும் பாதுகாப்பும் முக்கிய காரணிகளாக அமைந்து வருகின்றன.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் இதுபோன்ற 700 அலுவலகங்கள் சிங்கப்பூரில் செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் மதிப்பிட்டுள்ளது, இது கடந்த ஆண்டு 400 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.