Home உலகம் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம்

இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம்

by Jey

பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில்,தெஹ்ரீக் – இ – இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

அவருக்கு எதிராக 24 எம்.பி.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததையடுத்து இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. பதவி விலகினார்.

கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும், தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

related posts