பாகிஸ்தானில், பஜார் பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில், நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணம் பைசாலாபாத் நகரில் நெரிசல்மிக்க பஜார் உள்ளது. இங்கு உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கருகி உயிரிழந்தனர்.தீயிலிருந்து தப்பிக்க ஐந்தாவது மாடியில் இருந்து குதித்த ஒருவர், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கட்டடத்தில் ஒரேயொரு குடும்பம் மட்டும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இறந்த ஏழு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இச்சம்பவத்துக்கு இரங்கலை தெரிவித்த பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வேஷ் இலாஹி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.