”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் செங்கல்லை காட்டி ஓட்டு கேட்ட உதயநிதி எங்கே” என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: அ.தி.மு.க., அரசு வலியுறுத்தியதன் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கு தேவையான 222 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சுற்றுச்சுவர், புதியசாலை போன்ற பணிகள் நடந்து தயார் நிலையில் உள்ளது.
முதல்வராக இருந்த போது பழனிசாமி ஒதுக்கிய நிலம் இங்கே இருக்கிறது. அதில் செங்கல் காட்டிய தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி எங்கே சென்றார். இந்த ஒன்றரை ஆண்டு காலம் செங்கலை காட்டியவரும், மக்களிடம் இருந்து செங்கோலை பெற்றவரும் அந்த செங்கலை பற்றி பேசவாய் திறக்க மறுப்பது ஏன்.
மக்கள் பிரச்னையில் உதயநிதி கவனம் செலுத்துகிறாரா அல்லது அவர் சார்ந்த கலைத் துறையில் கவனம் செலுத்துகிறாரா. இவ்வாறு கூறினார்.