வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள்.
இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் பழங்குடியின மக்களுடன் மம்தா பானர்ஜி சேர்ந்து நடனமாடி அசத்தினார்.
தாளத்திற்கு ஏற்ப உடல் அசைவுகளால் கவனம் ஈர்த்த பழங்குடியின மக்களுடன் முதல்-மந்திரி மம்தாவும் கலந்து கொண்டு, நடனமாடியது பலரது கவனத்தை ஈர்த்தது.
இதனை அங்கிருந்தவர்கள் ரசித்து பார்த்ததோடு, இந்த காட்சிகளை தங்கள் செல்போனில் படம்பிடித்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது