Home உலகம் ரஷியாவில் இருந்து பெறும் எரிவாயுவை நம்பியே ஐரோப்பிய நாடுகள்

ரஷியாவில் இருந்து பெறும் எரிவாயுவை நம்பியே ஐரோப்பிய நாடுகள்

by Jey

ஐரோப்பிய நாடுகள் ரஷியாவில் இருந்து பெறும் எரிவாயுவை நம்பியே உள்ளன. ரஷியாவில் இருந்து பால்டிக் கடலுக்கு அடியில் குழாய் மூலம் எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஜெர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயு பின்னர் அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ‘நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2’ ஆகிய இரண்டு திட்டங்கள் மூலம் ரஷியாவில் இருந்து கடல் வழியாக மிகப்பெரிய குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்படுகிறது.

‘நார்ட் ஸ்ட்ரீம் 1’ திட்டத்தில் ஒரு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ‘நார்ட் ஸ்ட்ரீம் 1’ குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் அனுப்புவதை ரஷியா நிறுத்தியது

‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ திட்டத்தில் 2 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழாய்களும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 1’ குழாய் அமைத்துள்ள அருகிலேயே செல்கிறது.

related posts