Home உலகம் வெனிசுலாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலச்சரிவு

வெனிசுலாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலச்சரிவு

by Jey

மத்திய வெனிசுலாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய வெனிசுலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் 50 பேர் வரை மாயமானதாகவும் துணை அதிபர் டெல்சிரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 22 பேர் வரை பலியாகி உள்ளனர். 50 பேர் வரை மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

related posts