Home இலங்கை இலங்கையின் சனத்தொகையில் பாதிப்பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அவலநிலை

இலங்கையின் சனத்தொகையில் பாதிப்பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அவலநிலை

by Jey

இலங்கையின் சனத்தொகையில் பாதிப்பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அவலநிலையில் இருப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் சமூகவியல் துறையினால் இந்த ஆய்வு கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த ஜனவரி மாதம் 3042300 பேர் மட்டுமே இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்திருந்ததாக முன்னைய புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

எனினும் கடந்த எட்டு மாதகாலத்தினுள் அந்தத் தொகை 9690000 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படாத போதும் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் தொடக்கம் இந்த ஆண்டின் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த காலங்களில் 29ஆயிரத்து 278 ரூபாவில் ஒரு நடுத்தரக் குடும்பம் ஒரு மாத செலவை சரிக்கட்டிக்கொள்ள முடியுமாக இருந்த போதும் தற்போதைக்கு ஒரு நடுத்தர குடும்பத்தின் சராசரி செலவு 48ஆயிரத்து 611 ரூபாவாக அதிகரித்துள்ளது என்றும் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய

related posts