Home விளையாட்டு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள பும்ரா

உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள பும்ரா

by Jey

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் 1 டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்

. இது குறித்து அவர் கூறியதாவது:- நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். சமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல. இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் சமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதே பிரச்சனையாகும். அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.

related posts