Home உலகம் எலன் மஸ்க் தெரிவித்த ஆலோசனைக்கு – கண்டனம்

எலன் மஸ்க் தெரிவித்த ஆலோசனைக்கு – கண்டனம்

by Jey

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 231-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது.

இதனிடையே, போர் நடந்து வரும் உக்ரைனில் அமைதி நிலவ வேண்டுமானால் டான்பாஸ் மற்றும் கிரீமியாவில் வாழும் மக்கள் தாங்கள் ரஷியாவில் இணையவேண்டுமா அல்லது உக்ரைனில் இணைய வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம், இல்லை என்ற இரு பதில்களுடன் எலன் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார்.

இதில், டான்பாஸ்க் மற்றும் கிரீமியா மாகாண மக்கள் தான் இந்த விவகாரத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு 59 சதவிகித வாக்குகள் ஆம் என்றும் 41 சதவிகித வாக்குகள் இல்லை என்றும் பதிவாகின. உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து எலன் மஸ்க் தெரிவித்த இந்த ஆலோசனைக்கு உக்ரைன் நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

related posts