பயங்கரவாதிகளுடனான மோதலில் குண்டடிப்பட்டு காயமடைந்த ராணுவ நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாகவும், அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஆனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் ‘ஜூம்’ என்றழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றுள்ளது.
இந்த மோதலில், பயங்கரவாதிகளுக்கிடையேயான தாக்குதலில் ராணுவ நாய் ஜூம் குண்டடிபட்டு காயமடைந்துள்ளது. நாய் உடலில் 2 குண்டுகள் பாய்ந்தது.
மருந்து தயாரிப்பை முற்றிலும் நிறுத்த ஹரியானா அரசு உத்தரவு
காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இருமல் மருந்தை தயாரித்த மெய்டென் மருந்து நிறுவனத்தின் சோனிபட்டு தொழிற்சாலையின், ஒட்டுமொத்த மருந்து தயாரிப்பை முற்றிலும் நிறுத்த ஹரியானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.