Home இந்தியா ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்தியா

ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்தியா

by Jey

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஐந்து நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

இந்தநிலையில் , அமெரிக்க – இந்தியா பொருளாதார சந்திப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அமெரிக்க நிதித்துறை செயலாளர் யெல்லனை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் பேசியதாவது:- எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று எரிசக்தியின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையில் உள்ள சிரமம், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவை கிடைப்பதில் உள்ள சிரமம். நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகள் குறைவாகவே திருத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று கால பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, பொது முதலீடு, திறன் பயன்பாட்டில் முன்னேற்றம், கடன் வளர்ச்சியில் பரந்த அடிப்படையிலான மறுமலர்ச்சி, வலுவான கார்ப்பரேட் இருப்புநிலைகள், உற்சாகமான நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கை மற்றும் குறைந்து வரும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை உருவாக்கியுள்ளது.

தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பல துறைகள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய செயல்பாட்டு அளவைத் தாண்டிவிட்டது, உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பின்தங்கிய நிலையில் உள்ளது, ஆனால், அவை இடைவெளிக்கான காலத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் முன்னேறிய நாடுகள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முடிவுகளின் “உலகளாவிய கசிவுக்கு” பொறுப்பேற்க வேண்டும்.

நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்தியா பல நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவதாகும். அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை தயாராக உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.

related posts