Home இந்தியா ஹரியானாவின் சோனிபட் பகுதியில் செயல்படும் மெய்டன் என்ற மருந்து கம்பெனி…

ஹரியானாவின் சோனிபட் பகுதியில் செயல்படும் மெய்டன் என்ற மருந்து கம்பெனி…

by Jey

ஹரியானாவின் சோனிபட் பகுதியில் செயல்படும் மெய்டன் என்ற மருந்து கம்பெனி, புரோமெதாஜின் ஓரல் சொல்யுசன், கோபெக்மலின் குழந்தை சளி மருந்து, மேக் ஆப் பேபி குழந்தை சளி மருந்து மற்றும் மக்ரிப் சளி மருந்து ஆகியவற்றை தயாரித்துள்ளது.

ஹரியானாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகள் காரணமாக காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை தொடர்பாக, இந்தியா விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மருந்து பெரும்பாலும் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள காம்பியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காம்பியா நாட்டில், உடல்நலக்குறைவால் 66 குழந்தைகள் இறந்தனர். இதற்கு, ஹரியானாவில் தயாரான சளி மருந்துகள் காரணமாக இருக்கலாம் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இன்று(அக்.,12) இருமல் மருந்தை தயாரித்த மெய்டென் மருந்து நிறுவனத்தின் சோனிபட்டு தொழிற்சாலையின், ஒட்டுமொத்த மருந்து தயாரிப்பை முற்றிலும் நிறுத்த ஹரியானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

related posts