உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டு உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு பொறுப்பாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்த கதியே பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
மக்களின் ஆதரவுடன் ஆட்சியை முன்னெடுத்து செல்லும் நோக்கம் ஜனாதிபதி ரணில் விக் ரமசிங்கவுக்கு விருப்பம் கிடையாது.
அரசியலமைப்பு திருத்தம்,தேர்தல் முறைமை திருத்தம் ஆகியவற்றின் ஊடாக அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவே முயற்சிப்பார்.
மக்கள் மத்தியில் சென்று வாக்கு கோரி,தேர்தல் முறைமை ஊடாக ஆட்சிக்கு வருவதை அவர் விரும்புவதில்லை.
எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ள வேளை தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி பொருத்தமற்ற வகையில் குறிப்பிட்டுள்ளார்.