கனேடிய அரசாங்கம் உக்கிரேனுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுமார் 47 மில்லியன் கனடிய டாலர்கள் பெறுமதியான ராணுவ உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீரங்கி குண்டுகள், செய்மதி தொலைதொடர்பு சாதனங்கள், குளிர்கால அங்கிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனுக்கு தொடர்ச்சியாக உதவுவதாக பல மேற்குலக நாடுகள் உறுதியளித்துள்ளன.
கனேடிய அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு வழிகளில் உதவி செய்துள்ளது என்பதுடன் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.