கனடாவின் தென் சிம்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் குறித்த இளைஞனும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 வயதான கிறிஸ் டொன்காஸ்டர் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தனது இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.