Home இந்தியா வெண்டை பயிரில் இலை கருகல் நோய் – விவசாயிகள் கவலை

வெண்டை பயிரில் இலை கருகல் நோய் – விவசாயிகள் கவலை

by Jey

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிடப்பட்டுள்ளனர்.

மேலும் பருவகால பயிர்களையும் அவ்வப்போது விவசாயிகள் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர். தண்ணீர் இருக்கும் விவசாயிகள் காய்கறி பயிர்களையும் பயிரிடப்பட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் அதிகளவில் வெண்டை பயிரிடப்பட்டுள்ளனர். இந்த வெண்டை பயிரில் இலை கருகல் நோய் தாக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெண்டை பயிரிட்டு அதனை பராமரித்து வருகிறோம். 25 முதல் 35 நாட்கள் ஆன நிலையில ்வெண்டைப் பயிரில் இலைகள் அதிகளவில் காய்ந்து வருவது மட்டுமல்லாமல் இலைகள் உதிர்ந்தும் வருகிறது. இதனால் பூக்கள் வருவதில்லை. காய்களும் குறைந்த அளவே காய்கிறது.

மேலும் காய்கள் அனைத்தும் வளைந்த நிலையில் வருகிறது. பல்வேறு வகையான மருந்துகள் தெளித்தும் இதனை கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமப்படுகிறோம். என்றனர். எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வெண்டை பயிரை தாக்கும் நோய்கள் குறித்து விவசாய நிலங்களுக்கு நேரடியாக ஆய்வு செய்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

related posts