Home கனடா ஒன்றாரியோவில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

ஒன்றாரியோவில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளது.

அண்மைய நாட்களில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக 1229 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதத்தின் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதிகரித்த எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் எண்ணிக்கையும் 143 ஆக உயர்வடைந்துள்ளது. பி சி ஆர் பரிசோதனை களில் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பும் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

related posts