கனடாவில் வீட்டு வாடகை சராசரியாக 2000 டாலர்கள் என பதிவாகி உள்ளது.
பட்டியலிடப்பட்ட கனடிய வீடுகளின் வாடகைத் தொகையானது கடந்த ஆண்டு விடவும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14 தசம் நான்கு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
சராசரியாக கனடாவில் வீடு ஒன்றின் வாடகை தொகையானது 2043 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய வீட்டு வாடகை சராசரி தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதத்தை விடவும் செப்டம்பர் மாதத்தில் கனடாவின் அனேக பகுதிகளில் வீட்டு வாடகை தொகை நான்கு தசம் மூன்று வீதத்தினால் உயர்வடைந்துள்ளது