இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்து வருகிறது. இங்கிலாந்து பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது.
புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
இது பிரதமர் லிஸ் டிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார்.
மேலும், புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என தகவல்கள் வெளியாகின.பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கைகள், சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.