கனடாவில் ஆசிரியர் ஒருவர் இன ரீதியாக மாணவர்களை திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டர்ஹம் மாவட்ட பாடசாலை சபை இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வகுப்பறையில் இன ரீதியாக தூற்றுதலை மேற்கொண்டதாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வியோலா டெஸ்மன்ட் என்ற பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என பாடசாலை சபை அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அனைத்து வகையிலான இனக்குரோத நடவடிக்கைகள் ஒடுக்குமுறைகள் என்பன ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அது மனித உரிமைகளை மீறும் வகையிலானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.