Home கனடா கனடிய விசா தொடர்பில் போலி பிரச்சாரம்

கனடிய விசா தொடர்பில் போலி பிரச்சாரம்

by Jey

கனேடிய வீசா தொடர்பில் போலிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் கனடிய வீசா தொடர்பில் பரவி வரும் தகவல்கள் பிழையானது என தி டெக் ட்ரான்ஸ்பரன்சி ப்ரொஜெக்ட் (The Tech Transparency Project (TTP))அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.

whatsapp குரூப் களில் நண்பர்களை இணைத்துக் கொண்டு தகவல்களை பகிருமாறு சில தரப்பினர் போலியாக கோரிக்கையை விடுப்பதாகவும் இதன் ஊடாக வீசா கிடைக்கும் என பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் இவ்வாறு எவ்வித வீசா நடைமுறையும் அமுலில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணையவளியில் இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்வது தனி நபர்களின் தகவல்கள் களவாடப்படக்கூடிய சாத்தியத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பினர்களுடன் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts