டொரன்டோவின் பியர்சன் விமான நிலைய கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய கட்டண அதிகரிப்பானது பல்வேறு வழிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலைய கட்டண அதிகரிப்பானது விமான டிக்கெட்களின் விலை அதிகரிப்பில் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி பியர்சன் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி விமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிச்செல்லும் பயணிகள் தற்பொழுது செலுத்தும் ஐந்து டாலர் கட்டணம் அடுத்த ஆண்டு 35 டாலர்களாக உயர்த்தப்பட உள்ளது.