Home உலகம் தீப்பிடித்தபடி பறந்து வந்த ரஷிய ராணுவ விமானம்

தீப்பிடித்தபடி பறந்து வந்த ரஷிய ராணுவ விமானம்

by Jey

ரஷியாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எயிஸ்க் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம் மீது, ரஷிய ராணுவ விமானம் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது.

இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. அங்கிருந்த சுமார் 360 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த விமானி குதித்து தப்பிவிட்டார்.

இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட மொத்த 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்

related posts