Home கனடா போராட்டங்களை தடுப்பதற்கு ஆதரவளிக்கப்படும் – டக் போர்ட்

போராட்டங்களை தடுப்பதற்கு ஆதரவளிக்கப்படும் – டக் போர்ட்

by Jey

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கப்படும் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார் .

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடைமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டங்களுக்கு முழு அளவில் ஆதரவு அளிக்கப்படும் என போர்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த குளிர்காலத்தில் பிரீடம் கன்வே எனப்படும் போராட்டம் ஒன்று கனடாவில் இடம் பெற்றது.

இந்த போராட்டம் காரணமாக பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான போராட்டங்களை அடக்குவதற்கு பிரதமருக்கு பூரண ஆதரவனை அளிக்கப் போவதாக டாக் போர்ட் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக அவசர சட்டத்தை பயன்படுத்த மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஒன்றாரியோ மாகாண முதல்வர் போர்ட் தெரிவித்துள்ளார்

related posts