Home இலங்கை இ லங்கையில் 70 வீதத்தினால் அதிகரிக்கப்படு நீர் வழங்கல் இணைப்புக் கட்டணம்

இ லங்கையில் 70 வீதத்தினால் அதிகரிக்கப்படு நீர் வழங்கல் இணைப்புக் கட்டணம்

by Jey

இலங்கையில் இன்று (18.10.2022) முதல் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டணம் 70 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் அதிகரிப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்காக 16000 ரூபா முதல் 30,000 ரூபாவிற்கு இடைப்பட்ட கட்டணம் அறவிடப்படுகிறது.

இந்தநிலையில், புதிய அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

related posts