கனடாவின் மொன்றியல் பகுதியின் நாவல் நகரில் 2 சிறார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
11 வயதான சிறுவனும் 13 வயதான சிறுமியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குடும்ப பிணக்கு காரணமாக இடம் பெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் 46 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நபரும் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்முறை சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் அங்கே சிறுவர்கள் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதை அவதானித்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்து கொண்ட பிள்ளைகளின் தாய் அதிர்ச்சியை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.