கனடாவின் மிகப்பெரிய மளிகை பொருள் விற்பனை நிறுவனமான Loblaws, நிறுவனம் விலை அதிகரிப்பினை மேற்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் விலை அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1500 மளிகை பொருட்களுக்கான விலைகள் இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் உணவு பணவீக்க நிலை காரணமாக பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்து செல்கின்றன.
இவ்வாறான ஒரு பின்னணியில் மளிகை பொருட்களின் விலைகள் குறிப்பிட்ட காலம் வரை அதிகரிக்காது என விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டில் சிலவகை பொருட்களின் விலைகள் 10% உயர்வடைந்துள்ளது எனவும் மேலும் சில பொருட்களின் விலைகள் அதனை விடவும் அதிகரித்துள்ளது எனவும் உணவு மளிகை பொருள் நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
உணவுப் பொருள் விற்பனையின் போது தேவையற்ற வகையில் லாபமீட்டுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு விலை அதிகரிப்பனதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது