கனடாவில் இடம் பெற்ற சிறுவர் படுகொலை சம்பவம் தொடர்பில் அவர்களது தந்தை மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் நாவல் பகுதியில் இரண்டு சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 45 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்த நபரும் சம்பவத்தில் காயமடைந்து இருந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் போலீசார் அனுமதித்தினர்.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த சிறுவன் மற்றும் சிறுமியின் தந்தையே இவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
11 வயதான சிறுவனும் 13 வயதான சிறுமியும் வீட்டினுள் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவிக்கிறனர்.
படுகாயம் அடைந்த நிலையில் இருந்து அவர்களை மீட்ட போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர் 45 வயதான கம்மால்ஜித் அரோரா என்பவரையே போலீசார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை கவலையும் ஏற்படுத்தி உள்ளது.