Home இலங்கை மதுபான நிலையங்களுக்குப் பூட்டு?

மதுபான நிலையங்களுக்குப் பூட்டு?

by Jey

எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் பகுதிகளில் உள்ள மதுபான நிலையங்களை மூடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கோறிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பதுளை, நுவரெளியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ஆகையால், அப் பகுதிகளிலும், நாட்டின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் ஏனையப் பகுதிகளிலும், மதுபான விற்பனை நிலையங்களை, தீபாவளி தினத்தன்று மூடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், தீபாவளி தினமானது தமிழர்கள் ஆன்மீக ரீதியில் கொண்டாடும் புனித தினமாகுமென்பதையும், தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

related posts