இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை அயர்லாந்து அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.
தகுதிச் சுற்றில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக இன்று(19) நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி 06 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
ஹபார்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி, 61 ஓட்டங்களுக்கு முதல் 04 விக்கெட்களையும் இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது.
அயர்லாந்து அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.