தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் ஒரு மணி நேரத்தில் 249 கோப்பைகளில் தேநீர் தயாரித்து கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Wupperthal நகரத்தைச் சேர்ந்த Ingar Valentyn என்ற பெண் மூலிகை தேநீரை தயாரித்து உள்ளூர் மாணவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கினார்.
ஒரு மணி நேரத்தில் 150 கோப்பைகளை தயாரிக்கலாம் என்று நினைத்த அந்த பெண் முடிவில் 249 கோப்பைகளில் தேநீரை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.