கனடாவின் பகுதியில் போலீஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடு ஒன்றுக்குள் இருந்து குறித்த நபர் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
எக்லிக்கன் மற்றும் கென்னடி வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றபோது அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொது மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர்.
முன்னதாக குறித்த பகுதியில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.