தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவினால் நடாத்தப்பட்ட நேர்காணலில் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
வரி திருத்தங்கள், வட்டி விகித உயர்வு போன்றவை இவ்வாறு எடுக்கப்பட்ட சில முடிவுகள் என அவர் தெரிவித்துள்ளார்.