பிரபல இசைக்கலைஞர் ஹோகார்டிற்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் றொரன்டோ ஹோட்டல் ஒன்றில் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் உச்ச நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயலுக்கு ஏற்ற வகையில் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி Gillian Roberts அறிவித்துள்ளார்.
ஹோகார்ட் பத்து ஆண்டுகளுக்கு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படாது என நீதிபதி அறிவித்துள்ளார்.