பாடசாலை கல்வியை தொடரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் நிதி கொடுப்பன ஒன்றை வழங்க உள்ளது.
ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீவன் லிஸ்ட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
200 முதல் 250 டாலர்கள் வரையில் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
வைரஸ் தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய முறையில் நடைபெறவில்லை.
மாணவர்கள் கற்க முடியாது போன விடயங்களை கற்றுக் கொள்வதற்காக இவ்வாறு பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகள் மூலம் அவர்கள் கற்க முடியாமல் போனவற்றை கற்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை நேரத்தை அதிகரித்தேனும் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது