கனடாவில் குடும்ப வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்று மற்றும் முடக்க நிலைகள் போன்ற காரணிகளினால் இந்த வீட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு 336 பேர் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் 127082 பேர் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.