றொரன்டோ விமான நிலையத்தில் குண்டுப் பீதி காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
றொரன்டோவின் பில்லி பிஸொப் விமான நிலையத்தில் இவ்வாறு குண்டுப் பீதி ஏற்பட்டுள்ளது.
விமான நிலையம் இரண்டு மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டது.
விமான நிலையத்தின் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வெடிபொருள் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக விமான நிலைய நிர்வாகம் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.