Home இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் பதவி விலக வேண்டும்

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் பதவி விலக வேண்டும்

by Jey

திமன்றத் தீர்ப்பைத் தவிர வேறு ஒரு பொறிமுறையின் மூலம் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள் ஆகியுள்ளார்.

எவ்வாறாயினும், இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தலின் போது வேட்புமனுக்களை ஏற்கும் போது இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக அறிக்கை அளித்தால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

related posts