Home கனடா ஈரானிய அரசாங்கத்தை எதிர்த்து றொரன்டோவில் போராட்டம்

ஈரானிய அரசாங்கத்தை எதிர்த்து றொரன்டோவில் போராட்டம்

by Jey

ஈரானிய அரசாங்கத்தினை எதிர்த்து றொரன்டோவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரக் கணக்கானவர்கள் றொரன்டோவில் அணி திரண்டு ஈரான் அரசாங்கத்தை கண்டித்து போராட்டம் நடாத்தியுள்ளனர்.

ஈரானிய அரசாங்கம் அந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

றொரன்டோவின் குயின்ஸ்பார்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் சர்வாதிக ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமேன கனடாவில் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக ஈரானில் மாஷா அம்னி என்ற 22 வயது யுவதி உரிய முறையில் ஹிஜாப் அணியத் தவறியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், குறித்த பெண் உயிரிழந்தார்.

ஈரானிய அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடும் கோஷங்களுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

related posts