பிரம்டனின் மேயராக மீண்டும் பெற்றிக் பிரவுண் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் பிரவுணுக்கு 61 வீத வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல் அதிகாரபூர்வமானது அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
44 வயதான பிரவுண் இரண்டாவது தடவையாகவும் பிரம்டன் நகரின் மேயராக கடமையாற்றத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார்.
அண்மைய மாதங்களாக பிரவுண் கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கியதுடன் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரவுண் நகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.
வேறு பூசல்கள், எதிர்மறை கருத்துக்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரான வெற்றி என மேயர் பிரவுண் இந்த வெற்றியை வர்ணித்துள்ளார்.