Home இந்தியா கார் வெடி விபத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு

கார் வெடி விபத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு

by Jey

தமிழகம் உட்பட நாடு முழுதும் ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதை சிறப்புடன் கொண்டாட, மக்கள் ஒரு வாரமாகவே தயாராகி வந்தனர்.

கோவை கார் வெடி விபத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியும், இந்த விவகாரம் தொடர்பாக, எந்த கருத்தும் தெரிவிக்காமல், முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில், காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

முதலில் சிலிண்டர் விபத்து என்று கூறிய போலீசார், 2019ல் தேசிய புலனாய்வு அமைப்பினரால் விசாரணை நடத்தப்பட்ட நபர் தான், அந்த ஜமேஷா முபின் என்பதை அறிந்ததும், விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதை தொடர்ந்து, முபினின் நண்பர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள், இலங்கை சர்ச் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும், அவர்கள் கோவையில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது. இதனால், கோவை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடத்து மூன்று நாட்களாகியும், மக்களுக்கு தைரியத்தை அளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின், எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இது கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுதும் உள்ள மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

related posts