பீல் பிராந்திய பொலிஸார் சுமார் 25 மில்லியன் டொலர் போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.
இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த போதைப் பொருள் மீட்பு தொடர்பில் நாளைய தினம் வரிவான தகவல்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீல் பிராந்திய பொலிஸ் நிலையத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் இந்த சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸார் இதுவரையில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய போதைப் பொருள் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.