Home உலகம் மீண்டும் கொரோனா சீனாவில்

மீண்டும் கொரோனா சீனாவில்

by Jey

முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பரவத் துவங்கியுள்ள நிலையில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பூஜ்ஜிய கோவிட் திட்டத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை ஒழிக்க அந்நாட்டு அரசு போராடி வந்தது.

இந்நிலையில், மீண்டும் வூஹானில் கொரோனா அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் சுமார் 9 லட்சம் பேர் வசிக்கும் ஹன்யாங் மாவட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குனாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வரும் ஞாயிற்றுக் கிழமை வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டடோங், குவான்சு நகரங்களிலும் பொது முடக்கங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts