Home இந்தியா பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 45-வது ஆண்டு விழா

பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 45-வது ஆண்டு விழா

by Jey

இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு.

இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனித் திருத்தலம் உள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால் அனைத்து மதத்தினரும் இத்திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 45-வது ஆண்டு விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை நவநாள் திருப்பலி நடந்தது. மாலை ஜெபமாலை திருப்பலி நடக்கிறது. செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் போஸ்கோ தலைமையில் இந்த கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருத்தேர் பெருவிழா 2-ம் நாளான நாளை(வெள்ளிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடக்கிறது. காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது.

மானாம்பதி கண்டிகையில் உள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை விக்டர் வினோத், ஆர்.என்.கண்டிகையில் உள்ள தூய அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ரவி ஜோசப், பல்லாவரம் புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தின் உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் கிளாட்வின் ஆகியோர் தலைமை தங்குகிறார்கள்.

 

 

related posts