Home கனடா கனேடிய மத்திய வங்கி சரியான தீர்மானத்தை எடுத்துள்ளது

கனேடிய மத்திய வங்கி சரியான தீர்மானத்தை எடுத்துள்ளது

by Jey
 கனடிய மத்தேயு சரியான தீர்மானத்தை எடுத்துள்ளது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டேவிட் டாட் கே தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு மத்திய வங்கி முக்கிய வட்டி வீதங்களை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நிலைமைகளின் பாரதூரத் தன்மையை புரிந்து கொள்ளாது பல மத்திய வங்கிகள் பிழையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
 அதன் காரணமாகவே அநேகமான மத்திய வங்கிகள் வட்டி வீத அதிகரிப்பிற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் காலம் தாமதித்து மத்திய வங்கி நகர்வுகளை ஆரம்பித்துள்ள காரணத்தினால் வேகமாக வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 அனேகமான மத்திய வங்கிகள் குறிப்பாக வட அமெரிக்க மத்திய வங்கிகள் வட்டி வீத அதிகரிப்பிற்கு கூடுதல் காலத்தை எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கனடா வட்டி வீதத்தை அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு மத்திய வங்கி காலத்திற்கு காலம் வட்டி வீதத்தை உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

related posts